படம்: மஞ்சு விரட்டு
இசை:தேவா
குரல்:எஸ்.ஜானகி
பாடல் வரிகள்:
பெண்:
மாமன் வாங்கி தந்த...
வண்ண சேலைதான்...
இந்த வேலைதான்...
மேலே உடுத்துறப்போ...
அவன் மோகந்தான்...
புது ராகந்தான்...
பொட்டோடு பூமுடிச்சி...
பொன்மஞ்சள் பூசிவச்சி...
வந்திடும் மகராசி...
நகை சிந்திடும் முகராசி...
கண்விழி மை பூசி...
வரும் கொண்டவன் புகழ் பேசி...
மாமன் வாங்கி தந்த...
வண்ண சேலைதான்...
இந்த வேலைதான்...
மேலே உடுத்துறப்போ...
அவன் மோகந்தான்...
புது ராகந்தான்...
˜˜˜˜˜˜˜˜˜˜˜˜˜
தங்க மனசு கொண்ட
புருஷன்... நல்ல மனுஷன்... எனக்கரசன்...
தப்ப புரிஞ்சிக்கொண்டு
தனி மரமா இதுவரையில் இருந்தேன்...
நாலும் தெரிஞ்சபின்பு
நெழலா... அவன் நினைவா... உயிர் உறவா...
காலம் முழுதும், இங்கு உறுதுணையா
இறுதி வரையில் இருப்பேன்...
என் மாமன் கால் மண்ணை
அள்ளி எடுத்தேன்...
மண் சோறாய் நான் எண்ணி
மெல்ல சுவைப்பேன்...
மல்லிகை மலராலே...
ஒரு மெத்தையை இடுவேனே...
மன்னவன் வரும் பொது...
நான் மத்ததைத் தருவேனே...
மாமன் வாங்கி தந்த...
வண்ண சேலைதான்...
இந்த வேலைதான்...
மேலே உடுத்துறப்போ...
அவன் மோகந்தான்...
புது ராகந்தான்...
˜˜˜˜˜˜˜˜˜˜˜˜˜˜˜
பத்து குழைந்தை குட்டி...
அரும்பா, அடி கரும்பா... ரொம்ப அழகா...
பெத்து எடுத்து இங்கு
புருசனுக்கோர் பரிசெனவே தருவேன்...
ஊரும் உறவும் மெச்ச...
குடும்ப குத்து விளக்கா இங்கு விளங்க...
நாளும் பொழுதும் எந்தன்
கணவனுக்கு பணிவிடைகள் புரிவேன்...
நான் வந்த வீட்டை என் கண்ணாய் நினைத்தேன்...
நான் கொண்ட தாய் வீடாய் என்றும் மதிப்பேன்...
நல்லவள் இவள் என்று...
எனை அதையும் பாராட்ட...
இல்லறம் காத்திடுவேன்...
என்னை நாயகன் சீராட்ட....
மாமன் வாங்கி தந்த...
வண்ண சேலைதான்...
இந்த வேலைதான்...
மேலே உடுத்துறப்போ...
அவன் மோகந்தான்...
புது ராகந்தான்...
_______________________________________
No comments:
Post a Comment