படம்: வாரணம் ஆயிரம்
வரிகள்: தாமரை
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
குரல்: சுதா ரகுநாதன்
பெண்:
அனல் மேலே பனித்துளி...!
அலைபாயும் ஒரு கிளி!
மரம் தேடும் மழைத்துளி....!
இவைதானே இவள் இனி!
இமை இரண்டும் தனித்தனி...!
உறக்கங்கள் உறைபனி!
எதற்காக தடை இனி...!
அனல் மேலே பனித்துளி...!
அலைபாயும் ஒரு கிளி!
மரம் தேடும் மழைத்துளி...!
இவைதானே இவள்இனி!
இமை இரண்டும் தனித்தனி!
உறக்கங்கள் உறைபனி!
எதற்காக தடை இனி...!
˜˜˜˜˜˜˜˜˜˜˜˜
எந்தக்காற்றின் அளாவலில்....
மலரிதழ்கள் விரிந்திடுமோ!
எந்தன் தேவ வினாடியில்....
மன அறைகள் திறந்திடுமோ!
ஒரு சிறு வலி இருந்ததுவே.....
இதயத்திலே இதயத்திலே.....
உனதிருவிழி தடவியதால்!
அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே...!
உதிரட்டுமே உடலின் திரை...
அதுதான் இனி நிலாவின் கரை கரை...!
அனல் மேலே பனித்துளி...!
அலைபாயும் ஒரு கிளி!
˜˜˜˜˜˜˜˜˜˜˜˜˜˜
சந்தித்தோமே கனாக்களில்...!
சில முறையா? பல முறையா?!
அந்தி வானில் உலாவினோம்...!
அது உனக்கு நினைவில்லையா!
இரு கரைகளை உடைத்திடவே...
பெருகிடுவாய் கடல் அலையே...!
இரு உயிர் தத்தளிக்கையில்...
வழி சொல்லுமா கலங்கரையே...
உனதலைகள் எனை அடித்து
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட...
அனல் மேலே பனித்துளி...!
அலைபாயும் ஒரு கிளி!
__________________________________________________________
No comments:
Post a Comment