முதன் முதலாய் விண்ணில் சிறகடித்தது....
மாதமொருமுறை உன் தொலைபேசி
அழைப்பு வரும்போதெல்லாம்.....!
எல்லையில்லா ஆனந்தம்
உன்னுடன் பேசிய
அந்த நாள் முழுவதும்....!
இனம் புரியாத ஓர் உணர்வு
நீ அனுப்பும் குறும்செய்தியை
படிக்கும் போதெல்லாம்!
அலாதி இன்பம் உனக்காக
குறும்செய்தியை சேகரிக்கும் போதெல்லாம்!
என் கைபேசியை நீ என எண்ணி
அணைத்து இடத்திலும்
உன் குறும்செய்தியை மட்டும்
சேகரிக்கும்போது!
- நேசன்.
No comments:
Post a Comment