படம்:சாமுண்டி
இசை:தேவா
குரல்:எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
குரல்:எஸ்.ஜானகி
பாடல் வரிகள்:
பெ:முத்து நகையே... முழு நிலவே...
குத்து விளக்கே... கொடி மலரே...
முத்து நகையே... முழு நிலவே...
குத்து விளக்கே... கொடி மலரே....
கண்ணிரண்டும் மயங்கிட... கன்னி மயில் உறங்கிட.
நான் தான் பாட்டெடுப்பேன்...
உன்னைத் தாய் போல் காத்திருப்பேன்...
ஆ:முத்து நகையே... முழு நிலவே...
குத்து விளக்கே... கொடி மலரே...
இன்னும் பல பிறவிகள்... நம்முடைய உறவுகள்...
வாழும்.. தொடர்கதைதான்...
உந்தன் நேசம் வளர்பிறைதான்...
பெ:முத்து நகையே... முழு நிலவே...
குத்து விளக்கே... கொடி மலரே...
பெ:உன்னப் பார்த்து ஆசப்பட்டேன்...
அத பாட்டில் சொல்லிப்புட்டேன்...
நீயும் தொட நானும் தொட...
நாலு வகைக் கூச்சம் விட...
அட்டை போல ஒட்டியிருப்பேன்...
ஆ:இந்தக் காதல் பொல்லாதது...
ஒரு காவல் இல்லாதது...
ஊதக் காத்தில் வஞ்சி மாது...
ஒத்தயிலே வாடும்போது...
போர்வை போலப் பொத்தி அணைப்பேன்...
பெ:ஆறேழு நாளாச்சு விழி மூடி...
அடி ஆத்தாடி அம்மாடி உனைத் தேடி...
ஆ:நீதானே மானே என் இளஞ்சோடி...
உனை நீங்காது என்றும் என் உயிர் நாடி...
பெ:நித்தம் தவித்தேன்... நீ வரும் வரைக்கும்...!
ஆ:முத்து நகையே... முழு நிலவே...
குத்து விளக்கே... கொடி மலரே.....
பெ:முத்து நகையே... முழு நிலவே...
குத்து விளக்கே... கொடி மலரே...
ஆ: புள்ளி மானு பெண்ணானதா...
கெண்டை மீனு கண்ணானதா...
பூ முடிச்சுப் பொட்டு வச்சு...
புன்னகையில் தேன் தெளிச்சு...
பக்கம் ஒரு சொர்க்கம் வருதா...
பெ: அட வாய்யா கையத் தொடு...
பள்ளிப் பாடம் கத்துக் கொடு...
ஆவணியில் பூப்படைஞ்சே...
தாவணியைப் போட்டுக்கிட்ட...
சின்னப் பொண்ண ஆசை விடுதா...
ஆ: ஆவாரம் பூ வாட விடுவேனா...
ஒரு அச்சாரம் வெக்காம இருப்பேனா...
பெ: தேனாறும் பாலாறும் கலந்தாச்சு...
அன்பு நாளாக நாளாக வளர்ந்தாச்சு...
ஆ: என்னைப் படைச்சான்...
நீ துணை வரத்தான்...
பெ:முத்து நகையே... முழு நிலவே...
குத்து விளக்கே... கொடி மலரே...
கண்ணிரண்டும் மயங்கிட...
கன்னி மயில் உறங்கிட...
நான் தான் பாட்டெடுப்பேன்...
உன்னைத் தாய் போல் காத்திருப்பேன்...
பெ:முத்து நகையே... முழு நிலவே...
குத்து விளக்கே, கொடி மலரே.....!
No comments:
Post a Comment